×

கும்பாபிஷேகம்

பரமக்குடி, செப். 6: பரமக்குடி சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள கேதார கவுரிஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆலய திருப்பணிகள் நிறைவு பெற்று ஜீரணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கப்பட்டு செப்டம்பர் 2ம் தேதி முதல் நான்கு கால பூஜைகள் ஹோமங்கள் செய்து நேற்று காலை சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்றது.

அதனை தொடர்ந்து யாகசாலையில் அமைக்கப்பட்டிருந்த புனித நீர் எடுத்துவரப்பட்டு கோயில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயிலின் பரிவார தெய்வங்கள் மற்றும் கேதார கவுரிஸ்வரி அம்மனுக்கும் அபிஷேகம் செய்து திரு குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Ketara Gauriswari ,Amman ,Paramakkudi Chinnakadai Road ,Kumbabhishekam ,Dinakaran ,
× RELATED மாநில தடகள போட்டிபரமக்குடி வீரர்கள் பதக்கங்களை அள்ளினர்